நெசமாலுமே என்ன எழுதன்னு தெரில.. இது வரை எழுதினதும் இல்ல.
அங்க இங்க பின்னூட்டம் போடறதோட சரி..
அப்புறம் எப்டி.. அதை விடுங்க
இவ்ளோ மக்கள் இங்க எழுதறதை பார்த்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கு.. ரொம்ப நாள் முன்னாடியே நண்பன் சொன்னான். ரொம்ப நல்லா இருக்குடா.. போயி பாருன்னு.. நமக்கு தான் லந்து கொஞ்சம் ஜாஸ்தில்ல!! இப்போ பார்கறப்போ நிறைய இழந்தது தெரியுது.
ஆனா விட போறதில்ல.. (அதே லந்து) நாங்க archived பதிவு வரை படிச்சுருவம்ல..
ஒவ்வொருத்தரோட ஆதங்கம், அன்பு, விருப்பு, வெறுப்பு.. அப்டின்னு எல்லாமே தங்களோட சுய சிந்தனைல வெளிப்படுத்த ஒரு அருமையான வாய்ப்பு. தமிழ்மணம் அதுக்கு ஒரு நல்ல "base".. மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.
அடப்பாவி மக்கா, நானும் "base" -னு எழுத வேணாம்னு நல்ல தமிழ் வார்த்தை யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். மவனே கடைசி வரை தட்டு படவே இல்ல. இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா, இப்போ இருக்க கொஞ்ச நஞ்ச தமிழும் மறந்துடும் போல இருக்கு. அப்புறம் நான் "தமிழன் என்று சொல்லடா.. தலை குனிந்து செல்லடா.." -னு போக வேண்டியது தான்.
முதல் வேலையா என் பொண்ணுக்கு இன்னில இருந்து தமிழ் கத்துகுடுக்க ஆரம்பிக்கணும். (அதுக்கு, முதல்ல நீ போயி ஒழுங்கா படிடான்னு சொல்றது கேக்குது) 7 வயசு ஆகிற அண்ணன் பொண்ணு, இப்போ கூட chipapa -னு தான் இங்கிலீஷ் காரி மாதிரி ஸ்டைல் -ஆ கூப்பிடறா. பாட்டி தாத்தாட்ட பேசும்மானு phone-ஐ கொடுத்தா ஏதோ பெரிய தண்டனை மாதிரி முடியாதுங்கறா. அப்டியே பேசினாலும் இவ பேசுற ஆங்கிலம் அவங்களுக்கு புரியல, அவங்க பேசுற ஆங்கிலம் இவளுக்கு புரியல.
பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சிருக்கேன். பார்க்கலாம்..
எங்கே செல்லும் இந்தப் பாதை..
யாரோ யாரோ அறிவாரோ..
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
வாங்க வாங்க..ஜோதில ஐக்கியமாகுங்க:)
பல சரக்கு இருக்கு போல
மெல்ல மெல்ல நாங்கள் நன்றாக மெள்ள தட்டச்சிவிடுங்க ...
எப்படியோ வந்திட்டீங்கல...கொஞ்சம் நஞ்சம்(அப்படீன்னா என்னன்னு கேக்கப்படாது) தெரிஞ்ச தமிழையும் மறக்க செய்திடுவோம்
word verificationஐ எடுத்திடுங்க...
வருக...வருக...
வலையுலகிற்கு பல
நல்ல படைப்புகளைத் தருக...
முதல் வேலையா என் பொண்ணுக்கு இன்னில இருந்து தமிழ் கத்துகுடுக்க ஆரம்பிக்கணும். (அதுக்கு, முதல்ல நீ போயி ஒழுங்கா படிடான்னு சொல்றது கேக்குது) 7 வயசு ஆகிற அண்ணன் பொண்ணு, இப்போ கூட chipapa -னு தான் இங்கிலீஷ் காரி மாதிரி ஸ்டைல் -ஆ கூப்பிடறா. பாட்டி தாத்தாட்ட பேசும்மானு phone-ஐ கொடுத்தா ஏதோ பெரிய தண்டனை மாதிரி முடியாதுங்கறா. அப்டியே பேசினாலும் இவ பேசுற ஆங்கிலம் அவங்களுக்கு புரியல, அவங்க பேசுற ஆங்கிலம் இவளுக்கு புரியல.///
நல்ல முடிவு!!!
தமிழ் கத்துக்குடுங்க!!!
முதற்கண் என்னையும் மதித்து இங்கு வருகை தந்து பின்னூட்டம் எழுதிய
வித்யா, நட்புடன் ஜமால், நான் ஆதவன், புதியவன், தேவன்மயம் எல்லோருக்கும் நன்றி.
என்ன நடந்ததுன்னா என்னோட பதிவை தமிழ்மணத்தில் என்னால் இணைக்க/பார்க்க முடிய வில்லை. நீங்கள் எல்லோரும் எப்படி வந்தீர்கள் என் வலையகத்திற்கு?
நானும் தமிழ்மணம் பதிவு பட்டையை இணைக்க முயல்கிறேன். அதிலும் ஏதோ கோளாறு.
நான் ஆதவன், "word verificationஐ எடுத்திடுங்க..." சொன்னீங்க. சற்று விளக்கமாக சொன்னால் உதவியாக இருக்கும்.
Post a Comment