Tuesday, January 13, 2009

நானும் பாகிஸ்தானியும் எங்கள் ப்ராஜெக்ட்சும்

வாழ்வில் முதல் முறையாக ஒரு பாகிஸ்தானி மற்றும் அவர் குடும்பத்துடன் பழக சந்தர்ப்பம் கிடைத்தது.

கடந்த எட்டு மாதங்களாக அவர் வீட்டில் குடி இருக்கிறோம். ரொம்ப நல்ல மனுஷன். மிகுந்த உதவி மனப்பான்மை கொண்டவர். ஐந்து பிள்ளைகளுக்கு சொந்த காரர். ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது கேட்டேன், "என்னடா அவ்ளோ தானா, இல்ல இன்னும் ஐடியா இருக்கா-னு". எனக்கு போதும்னு தோணுது, மனைவிக்கு தான் இன்னும் மறு யோசனை இருக்குன்னு சொன்னான்.

அது சரி.. என்னால ஒண்ணை வச்சிட்டே சமாளிக்க முடியல. நீ எப்டின்னு கேட்டேன்.. அதெல்லாம் ரெண்டு மூணு-னு ஆகிருச்சுன்னா ஒன்னும் தெரியாதுன்னு வியாக்கியானம் சொன்னான்.

ரெண்டு மாசம் முன்னாடி வரை வெதர் நல்லா இருந்தப்போ நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டை சுற்றி நிறைய வேலை செய்தோம். வேலி, சைடு ஸ்டெப்ஸ்-க்கு ஒரு கூரை, வழிப்பாதை விரிவாக்கம் மற்றும் ஒரு கார்டன் ஷெட் ஆகியவற்றை ஒவ்வொன்றாக உருவாக்கினோம்.

ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள் இருந்ததால ரொம்ப ஜாலியா எல்லா வீக் எண்டும் வேலை செய்தோம்.

அப்பப்போ கொஞ்சம் முட்டிக்கவும் செய்வோம். நான் இப்டி பண்ணுவோம்னு சொல்லுவேன். கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, "மே பி யு ஆர் ரைட்" -னு சொல்லுவான். அதுக்கு அர்த்தம் "டேய் வெண்ணை நீ என்ன வேணா சொல்லிக்கோ, நான் என் இஷ்டப்படி தான் செய்வேன்னு" அர்த்தம்.

என்னவோ, அப்டி இப்டி எல்லாம் ஒரு வழியா வின்டர் வர்றதுக்குள்ள இழுத்து முடிச்சோம். சின்ன சின்ன தப்புகள் செய்தாலும் நிறைய கத்துகிட்டோம். வாழ்க்கைக்கு பின்னாடி உதவும்-னு நினைக்கிறேன்.

எல்லாம் சரி.. யாரோ பின் வீட்டுக்காரன் கம்ப்ளைன்ட் பண்ணி சரியான முறையில் கட்ட பட வில்லை, 6 இன்ச் சட்ட அளவுக்கு புறம்பாக இருக்கிறது-னு சொல்லி அரசாங்கத்தில் இருந்து ஓலை வந்து இருக்கு. அதனால எப்படி மொத்தமா நகர்த்துறதுன்னு யோசிச்சிட்டு இருக்கோம் வர்ற ஏப்ரல்ல தான் செய்ய முடியும். இப்போ கடும் பனி. நகர்த்திய பின் "நான் இன்னும் இங்க தான் இருக்கேன்னு" ஒரு கொடி பறக்க விடரதாகவும் ஒரு பிளான். பார்க்கலாம். அதை பத்தி தனிய எழுதறேன்.

Monday, January 5, 2009

எங்கே செல்லும் இந்த பாதை

நெசமாலுமே என்ன எழுதன்னு தெரில.. இது வரை எழுதினதும் இல்ல.
அங்க இங்க பின்னூட்டம் போடறதோட சரி..
அப்புறம் எப்டி.. அதை விடுங்க

இவ்ளோ மக்கள் இங்க எழுதறதை பார்த்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கு.. ரொம்ப நாள் முன்னாடியே நண்பன் சொன்னான். ரொம்ப நல்லா இருக்குடா.. போயி பாருன்னு.. நமக்கு தான் லந்து கொஞ்சம் ஜாஸ்தில்ல!! இப்போ பார்கறப்போ நிறைய இழந்தது தெரியுது.

ஆனா விட போறதில்ல.. (அதே லந்து) நாங்க archived பதிவு வரை படிச்சுருவம்ல..

ஒவ்வொருத்தரோட ஆதங்கம், அன்பு, விருப்பு, வெறுப்பு.. அப்டின்னு எல்லாமே தங்களோட சுய சிந்தனைல வெளிப்படுத்த ஒரு அருமையான வாய்ப்பு. தமிழ்மணம் அதுக்கு ஒரு நல்ல "base".. மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.

அடப்பாவி மக்கா, நானும் "base" -னு எழுத வேணாம்னு நல்ல தமிழ் வார்த்தை யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். மவனே கடைசி வரை தட்டு படவே இல்ல. இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா, இப்போ இருக்க கொஞ்ச நஞ்ச தமிழும் மறந்துடும் போல இருக்கு. அப்புறம் நான் "தமிழன் என்று சொல்லடா.. தலை குனிந்து செல்லடா.." -னு போக வேண்டியது தான்.

முதல் வேலையா என் பொண்ணுக்கு இன்னில இருந்து தமிழ் கத்துகுடுக்க ஆரம்பிக்கணும். (அதுக்கு, முதல்ல நீ போயி ஒழுங்கா படிடான்னு சொல்றது கேக்குது) 7 வயசு ஆகிற அண்ணன் பொண்ணு, இப்போ கூட chipapa -னு தான் இங்கிலீஷ் காரி மாதிரி ஸ்டைல் -ஆ கூப்பிடறா. பாட்டி தாத்தாட்ட பேசும்மானு phone-ஐ கொடுத்தா ஏதோ பெரிய தண்டனை மாதிரி முடியாதுங்கறா. அப்டியே பேசினாலும் இவ பேசுற ஆங்கிலம் அவங்களுக்கு புரியல, அவங்க பேசுற ஆங்கிலம் இவளுக்கு புரியல.

பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சிருக்கேன். பார்க்கலாம்..

எங்கே செல்லும் இந்தப் பாதை..
யாரோ யாரோ அறிவாரோ..